சரத்குமார், ராதாரவிக்கு எதிராக நடிகர் சங்கம் எடுத்த அதிர்ச்சி முடிவு
இன்று நடந்த நடிகர் சங்க கூட்டத்தின் முடிவில் மூன்று நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் தெளிவான விளக்கம் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.