நடிகர் சரத்குமார் – அமிதாஷ் பிரதான் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னணி இளம் நட்சத்திர நடிகரான சிலம்பரசனும், முன்னணி நட்சத்திர இயக்குநரான மாரி செல்வராஜும் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்தனர்.
இயக்குநர் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பரம்பொருள்’. இதில் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சிலை கடத்தலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கவி கிரியேசன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் என்ற தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் கிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
சிலை கடத்தல் மற்றும் அதன் பின்னணி குறித்து விவரிக்கப்பட்டிருப்பதால் கிரைம் திரில்லர் ஜேனரை ரசிக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.