‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு :தி ஸ்மைல் மேன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஷியாம் பிரவீண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தி ஸ்மைல் மேன்’. இதில் சரத்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சிஜா ரோஸ் மற்றும் இனியா நடித்திருக்கிறார்கள். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மேக்னம் மூவிஸ் சென்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் தயாரான 150வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை அவரது ரசிகர்கள் வரவேற்று இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.