சமுத்திரக்கனிக்கு பதில் ஜெயராம் – விபரம் உள்ளே
சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா திரைப்படம் தமிழமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது வரை தன்னுடைய எந்த படத்தையும் மற்ற மொழிகளில் சமுத்திரக்கனி ரீமேக் செய்தது கிடையாது.
சமீபத்தில் ஒப்பம் என்ற படத்தின் மூலம் மலையாள உலகில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் முதன்முறையாக மலையாள மொழியில் மீண்டும் அப்பா படத்தை ரீமேக் செய்யவுள்ளார் சமுத்திரக்கனி.
இதில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார். மேலும் ஒரு சின்ன வேடத்திலும் சமுத்திரக்கனி தலை காட்டவுள்ளாராம்.