சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விடயங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு அகில இலங்கை இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லீம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் இருந்து மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் சிலாபத்தில் இடம்பெற்றுள்ள துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிலாபத்தில் அமைதியின்மையைத் தோற்றுவித்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அநாவசியமாக செயற்படுவதைத் தவிர்க்குமாறும் தேவையற்ற விடயங்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்வதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.
அத்துடன், தாய்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைக் களைய சமாதானமும் பொறுமையுமே ஒரே வழி என உலமா சபையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது