ஸ்ரீலங்காவில் பிறந்த சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் வடக்கு மெட்ரோ பொலிட்டன் பிராந்தியத்திற்கான தலைவராக செயற்பட்டுவந்த க்ரேக் பாபர் அந்த பதவியில் இருந்து ஒய்வுபெற்றிருந்த நிலையில் சமந்தாவிற்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படாத சமந்தா இரத்தினம், சமூகப் பணியாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.
கட்சிக்கு உற்சாகமான நேரம் எனக் குறிப்பிட்டுள்ள சமந்தா இரத்தினம், அடுத்த ஆண்டு இரண்டு சபைகளிலும் சமமான அதிகாரத்தை தமது கட்சி பெற்றுக்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூகப் பணியாளர் என்ற வகையிலும் சபை உறுப்பினர் என்ற வகையிலும் மாநில அரசாங்கத்தின் தோல்விகளை எடுத்துக்காட்டவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்ளுக்கான உத்தியோகபூர்வ நிகழ்வை இரத்துச் செய்ய வேண்டும் என வடக்கு மெல்பேர்ன் சபையில் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய பிரேரணை மூலம் சமந்தா இரத்தினம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.