சமந்தா, அனுஷ்கா கல்யாணத்திற்கு பிறகு நயன்தாரா கல்யாணமா?
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை. இந்த வருடம் அவர் நடித்த நிறைய படங்கள் ஹிட்டானது.
கூடவே காதல் குறித்த செய்திகளும் ரசிகர்கள் மனதை ஹிட்டாக்கியது. சிம்புவுடன் காதல் பின் வம்பாகி பிரபு தேவாவுடன் காதல் என செய்திகள் பறந்தது.
பின் விலகிப்போன இவர் நானும் ரௌடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று சொல்லப்பட்டு செய்திகள் வந்தன.
ஆனாலும் எதுவும் சொல்லாமல் இருக்கும் இவர்களால் மௌனம் சம்மதம் என ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
சமீபத்தில் விக்னேஷ் சிவனையும் அவரது அம்மாவையும் வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்த நயன்தாரா இந்த முறையாவது காதல் வெற்றி பெறவேண்டும் என நினைக்கிறாராம்.
விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு அவரை பிடித்து வீட்டதனால் அடுத்தவருடம் திருமணம் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படுறது. நயன்தாரா தற்போது 3 கோடி வரை சம்பளம் வாங்குவதனால் படத்தில் தொடந்து நடிப்பாரா என பேசப்படுகிறது.
ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது அனுஷ்காவிற்கு விரைவில் பிரபல தொழிலதிபரோடு திருமணம் செய்வதாக வந்த செய்தியை தொடர்ந்து தற்போது நயன்தாரா பெயரும் சொல்லப்படுகிறது.