நடிகர் நாக சைத்தன்யா தற்போது அளித்திருக்கும் பேட்டி மறைமுகமாக சமந்தாவை சாடுவது போல் தெரிகிறது.
பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவின் சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் விவாகரத்துக்கான உண்மையான காரணத்தை அவர் மறைமுகமாக கூறியதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைத்தன்யா மற்றும் சாமந்தா இருவரும் தங்களது நான்காவது திருமண நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அக்டோபர் 2-ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தா தனது ஒப்பனையாளர் ப்ரீத்தம் ஜுஹல்கருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அவர் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், சிலமுறை கருக்கலைப்பு செய்தார் என்றெல்லாம் அந்த விவாகரத்துக்கு காரணங்கள் கூறப்பட்டன. இதையடுத்து ’விவாகரத்து என்பது மிகவும் வேதனையான விஷயம். அதிலிருந்து மீள எனக்குக் கொஞ்சம் நேரத்தைக் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், தனிப்பட்ட முறையில் என் மீதான இந்தத் தாக்குதல் இடைவிடாமல் தொடர்கிறது. ஆனால் என்னை உடைக்கும் விதத்தில் அவர்கள் சொல்லும் எதையும் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று சமூக வலைதளங்களில் தெரிவித்தார் சமந்தா. மறுபுறம், நாக சைதன்யா தனது விவாகரத்து பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி மறைமுகமாக சமந்தாவை சாடுவது போல் தெரிகிறது. அவர் தனது பேட்டியில், “நான் எல்லாவிதமான வேடங்களையும் தேர்ந்தெடுக்கும் போது, அது என் குடும்பத்தையும், எங்களின் கெளரவத்தையும் பாதிக்காத வகையில் கவனமாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘தி ஃபேம்லிலி மேன் 2’ ஆகியவற்றில் சமந்தா போல்டான கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தது தான் தம்பதிகளிடையே விரிசலை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்கிறது தெலுங்கு வட்டாரம்.#No 1 TamilWebSite
