சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே விவாதம் நடாத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் பின்னரேயே விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
அறிக்கைக்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான தினம் குறித்து பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.