சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை சோளம் – 1 கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.
சூப்பரான சோள தோசை ரெடி.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]