சத்திரசிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சிறந்த நிலையில் உள்ளார் என வத்திகான் இன்று தெரிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுக்கு குடலிறக்கப் பாதிப்பு காரணமாக, ரோம் நகரிலுள்ள கெமலி வைத்தியசாலையில் நேற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவை அவர் அமைதியாக கழித்தார் எனவும் அவரின் உடல்நிலை சிறப்பாக உள்ளது எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களுக்கு அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.