எதிர்வரும் புதன்கிழமை முதல் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ கிராம் கருப்பு சீனி 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் மாதாந்திர சீனி நுகர்வு சுமார் 45,000 மெட்ரிக் தொன் ஆகும். அதில் 23,000 மெட்ரிக் தொன் மக்களின் நுகர்வுக்காகவும் மீதமுள்ளவை ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டில் தினசரி சர்க்கரை நுகர்வு சுமார் 1,500 மெட்ரிக் தொன். இந் நிலையில் அரிசி மற்றும் சீனியின் குறிப்பிடத்தக்க விலை உயர்வு நுகர்வோருக்கு நியாயமற்றது.
எனவே தினசரி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அடுத்த வாரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.