சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு!
வெயங்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லமொன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் கீழ் தளத்தில் முதியோர் இல்லம் காணப்பட்டதாகவும், அங்கு 12 முதியவர்கள் இருந்ததாகவும், இவர்களுள் ஆண்கள் ஐவரும்,பெண்கள் 7 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியராக தன்னை இனங்காட்டிக்கொண்ட பெண் ஒருவராலேயே இந்த முதியோர் இல்லம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், பணம் பறிக்கும் நோக்கிலேயே நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தேசிய வயது முதிர்ந்தோர் செயலகம் மற்றும் அத்தனகல சுகாதார அதிகாரிகள் அலுவலகர்களும் இணைந்தே குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முதியோர் இல்லத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு வயதான பெண்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, இதை நடாத்திச் சென்ற பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.