நல்லிணக்க அரசாங்கத்தின் நாளை(25) நியமனம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை (25) காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பொலிஸ் சேவையை உள்ளடக்கியுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சராகவுள்ள சாகல ரத்னாயக்கவுக்கு சுற்றுலாத் துறை வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அமைச்சை சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர்களின் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதனால், இந்த அமைச்சை பிரதமரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.