சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவேற்றியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால், முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் தளத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்படி தனது டுவிட்டர் தளத்தில் தனது கருத்தினைப் பதிவு செய்திருந்தாா்.
மேலும், நான் சட்டத்தின் அடிப்படையிலேயே பொது மக்களின் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தினேன். இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமம். இது ஒரு சிலருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கக்கூடாது என மேலும் தெரிவித்துள்ளார்.