ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தாலும், தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளேன் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியில் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் எவரையாவது கட்சியின் மத்திய செயற்குழு பெயரிட்டாலும் அவருக்கும் தனது ஆதரவை வழங்குவேன் எனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
தற்பொழுது கட்சியின் முன்னுள்ள சவால் எல்பிட்டிய தேர்தலுக்கு முகம்கொடுப்பதாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.