சச்சின் சாதனையை முறியடிக்க துடிக்கும் பிரபல வெளிநாட்டு வீரர்
வங்கதேசம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் குக், இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்டில் பங்கேற்ற வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு சச்சினின் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை ஓரம் கட்டுவதே என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், சமீபகாலமாக இங்கிலாந்து அணி, அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க துவங்கியுள்ளது. அதனால் விரைவிலேயே சச்சினின் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை ஓரம்கட்ட வாய்ப்பு உள்ளது.
ஆனால் அதை நோக்கி பயணம் செய்வது மட்டுமே இதில் மிகவும் ஆபத்தான விஷயம். 11 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான போது, இது போன்ற சாதனைப்பயணம் செய்வேன் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை, வாய்ப்பு கிடைத்தால் எதையும் விடக்கூடாது என கூறியுள்ளார்.
இவர் சமீபத்தில் குறைந்த வயதில் 10,000 ஓட்டங்கள் என்ற சச்சினின் நீண்ட கால சாதனையை பின்னுக்கு தள்ளினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.