சச்சினுக்கு அறுவை சிகிச்சை!
இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் பல ரசிகர்களை கொண்ட முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுல்கர், முழங்கல் அறுவை சிகிச்சை உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ச்ச்சின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஓய்வு பெற்ற பிறகும் கூட சில காயங்கள் பிரச்சனைகள், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஒய்வு எடுத்து வருவகிறேன்.
ஆனால், நான் மிக விரைவில் மீண்டு வந்து எனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் கால் பதித்து பல உலக சாதனைகளை நிகழ்த்திய டெண்டுல்கர். 2013ம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி கிரிக்கெட்டிலிருந்த ஒய்வு பெற்றார்.
ஒய்வை தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ச்ச்சின், இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்படுத்துதல் உட்பட பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்பது உலகறிந்த்தே.
எனினும், சச்சின் விரைவில் மீண்டு வர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்வதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.