சசிகலா நியமனம் செல்லாது! ஓபிஎஸ் அளித்த 61 பக்க பதில்: தேர்தல் ஆணையத்தின் முடிவு?
அதிமுக் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை விளக்கி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சசிகலாவிற்கு எதிராக கிளம்பிய ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒரு அணி சேர்ந்தது.
இதனையடுத்து பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.
சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சசிகலாவின் விளக்க கடிதத்தின் நகலை ஓபிஎஸ் அணியினருக்கு அனுப்பிய தேர்தல் ஆணையம், மார்ச் 14ம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதன் பிறகு குறித்த பிரச்னையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை தமிழக மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.