ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மற்றும் சசிகலாவின் உதவியாளர் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகத் தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்ச்சியாக விசாரணை நடத்திவருகிறது. அப்போலோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர், தற்போதைய தலைமைச் செயலாளர், தீபா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர் வெங்கட்ராமன் ஜனவரி 30-ம் தேதியும் தற்போது, முதல்வரின் இரண்டாம் நிலைச் செயலாளராக உள்ள விஜயகுமாருக்கு ஜனவரி 31-ம் தேதியும் கலை மற்றும் கலாசாரத்துறை ஆணையராக உள்ள ராமலிங்கம் பிப்ரவரி 1-ம் தேதியும், பிப்ரவரி 2-ம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயஶ்ரீ முரளிதரனும் நேரில் ஆஜராக வேண்டும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல, பிப்ரவரி 5-ம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் பிப்ரவரி 8-ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐய்யப்பனும் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.