சென்னை போயஸ் இல்லத்திற்கு இன்று காலை சென்ற ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகிய இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்தி சேகரிக்க சென்றிருந்த செய்தியாளர்கள் மீது போயஸ் கார்டனில் இருந்த தனியார் செக்யூரிட்டிகள் தாக்குதல் நடத்தி, கமெராக்களை சேதப்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தன்னை அடித்துவிரட்டி விட்டதாக தீபா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, பணத்திற்காக சொந்த அத்தையான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவுடன் சேர்ந்து கொன்று விட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
போயஸ் தோட்ட இல்லத்திற்கு தீபக் அழைத்ததால் தான் தாம் வந்ததாக விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய வருமாறு தீபக் தன்னை திட்டமிட்டு வரவழைத்தார்.
சசிகலாவின் ஆட்களுடன் சேர்ந்து சதி செய்து தம்மை போயஸ் இல்லத்திற்கு வர வைத்து ஏதோ செய்யப் பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடப்பது ஆட்சியே கிடையாது உடனடியாக இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்.
மேலும் தனது கணவர் மாதவனை கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார். தம்மை தாக்கிய பாதுகாவலர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
