இன்று தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் பொருட்கொள்வனவிற்காய் சங்கானை நகரில் மக்கள் அதிகளவில் கூடடியதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இருந்தபோதிலிலும் சனநெரிசலை கட்டுப்படுத்தவும் திருடர்களிருந்து மக்களை பாதுகாக்கவும் மானிப்பாய் பொலிஸார் ஒருவர்கூட அங்கு கடமைக்கு வரவில்லை.
மாறாக மதுபோதையில் காவாலிகளும் திருடர்களுமே அங்கு அதிகளவில் காணப்பட்டனர். காவாலிகள் மிகவேகமாக மோட்டார்சைக்கிள்களை செலுத்தி அச்சுறுத்தியமையால் மக்கள் பீதியடைந்து கொள்வனவில் ஈடுபட்டனர். பலர் இடைநடுவில் வீடுகளுக்கு திரும்பினர். காவலர்கள் கட்டுப்படுத்தவேண்டிய நகரத்தை காவாலிகள் கட்டுப்படுத்துகின்றனர் என மக்கள் திட்டித் தீரத்தபடி சென்றனர்.
இவ்வருடம் மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் பண்டிகைகளின்போது இவ்வாறுதான் பொலிசார் தாங்கள் வருவதற்குபதிலாக ரவுடிகளை அனுப்புவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.