சுந்தர்.சி இயக்கவுள்ள பிரமாண்ட வரலாற்று படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் தான் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தார். மேலும் அதற்காக அவர் லண்டன் சென்று வாள் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் பின்னர் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.
கால்ஷீட் பிரச்சனை, முழு திரைக்கதை கொடுக்கவில்லை என ஸ்ருதி புகார் தெரிவித்தார். இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் படம் தொடங்காததால் தான் அவர் விலகிவிட்டார் என கூறப்படுகிறது.
விஜய்-அட்லீ படம் தான் இதற்கு முக்கிய காரணமாம். போட்ட பட்ஜெட்டை விட விஜய்61க்கு இயக்குனர் அட்லீ அதிக செலவு வைத்துவிட்டாராம், அதனால்தான் சங்கமித்ரா படத்தை துவங்க தேனாண்டாள் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
படப்பிடிப்பு சொன்ன நேரத்தில் துவங்கவில்லை என்பதால் அப்செட்டான ஸ்ருதி சங்கமித்ராவில் இருந்து விலகவிட்டார்.