சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோஹ்லியின் விஸ்வரூப ஆட்டம்
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதே முனைப்புடன் டோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 285 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டி பிடிப்பதற்கு விராட் கோஹ்லியின் ஆக்ரோசமான ஆட்டமே காரணமாகும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோஹ்லி 154 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் அவர் தன்னுடைய ஒரு நாள் அரங்கில் 26 வது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னர் ஒரு நாள் அரங்கில் 25 சதங்கள் கடந்து இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாராவின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் விஸ்வரூபம் எடுத்த கோஹ்லியின் ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.