திருட்டுக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் விரட்டிப் பிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மானி்ப்பாய் பிடாாரி ஆலயத்தில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவரே இவ்வாறு மானிப்பாய்ப் பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரவுக்குட்பட்ட பிடாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த 3பவுண் தங்கச் சங்கிலி அண்மையில் இனந்தெரியாத நபர்களால் அறுத்துச் செல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். தொடர்ந்து மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவர் மானிப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சம்வத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்ற குறித்த நபரே நேற்றயதினம் மானிப்பாய்ப் பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஏழாலைப் பகுதியில் குறித்த நபர் உள்ளார் என்று கிடைக்கப்பட்ட இரகசியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மானிப்பாய் பொலிஸ் அதிகாரி சுதர்சன் தலமையிலான குழுவினர் குறித்த சந்தேக நபரைத் துரத்திப் பிடித்தனர். கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே பிடிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபருடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸார் மீட்கபப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் மல்லாகம் நீதிவன் மன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.