அலெஸ்கா கடற் பகுதியில் 8.2 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையத்தின் ஆரம்ப தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
மிகவும் வலுவான இந்த நிலநடுக்கம் அலெஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 10:15 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்களின் தொலைபேசிகளுக்கு அனுபப்பட்ட அவசர எச்சரிக்கையில் தேசிய வானிலை நிலையம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,
தேசிய வானிலை சேவை ஒரு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான சக்திவாய்ந்த அலைகள் மற்றும் வலுவான நீரோட்டங்கள் உங்களுக்கு அருகிலுள்ள கடற்கரைகளை பாதிக்கலாம்.
நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். கடற்கரையை அண்மித்த பகுதிகளிலிருந்து விலகி உயர்வான இடங்களை நோக்கிச் செல்லுங்கள்.
மறு அறிவித்தல் வரை கடற்கரைகளிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என்று கூறியுள்ளது.