பெரு நாட்டில் சக்கரங்கள் இயங்காமல் தரை இறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
பெரு நாட்டின் தலைநகர் லிமா. இந்நகருக்கு அருகில் ஜார்ஜ் சாவேஸ் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று மாலை சிறிய ரக விமானம் ஒன்று தரை இறங்க முயன்றது இந்த விமானத்தில் 60 பயணிகள் பயணம் செய்துக் கொண்டு இருந்தனர்.
விமானத்தின் முன் சக்கரங்கள் இறங்கும் போது வெளிவராமல் சிக்கிக் கொண்டன. மெதுவாக விமானி விமானத்தை தரையில் இறக்கினார். விமானத்தின் சக்கரம் இயங்காததால் தரையில் மோதி நெருப்புப் பொறி பறக்க இறங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் ஊழியர்களுகும் எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.