வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நேற்றைய முடிவுகளில் மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் குறித்த கிராமத்தில் முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நேற்றையதினம் சுகாதாரபிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா சுந்தரபுரம், மகாறம்பைக்குளம்,தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.