பாகிஸ்தானில் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயதுச் சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் ஜலல்பூர் பட்டியான் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தனக்குச் சொந்தமான கோழியை 14 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து பின்னர் அதனைக் கொன்று விட்டான் என்று கோழியின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறையிட்டார்.
அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், சிறுவன் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொன்றது உண்மையென்று அறிந்தனர்.
இதுகுறித்து பொலிஸர் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கோழியை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தோம். அந்தச் சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை தான். பாலியல் விரக்திக்கு (’sexual frustration’) ஆளான சிறுவன் இந்தக் காரியத்தைச் செய்துள்ளான். மனரீதியாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான். ’இயற்கைக்கு மாறான குற்றம்’ புரிந்த பிரிவின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம் ” என்று தெரிவித்துள்ளார்.