கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பகுதியை சேர்ந்த மூவரும், பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவர், மாவடிச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவரும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தொழிலுக்கு சென்றவரும், கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காவற்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று சனிக்கிழமை எட்டாவது நாளாகவும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை காவற்துறை பிரிவில் முப்பத்தி ஆறு பேரும், ஏறாவூர் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி காவற்துறை பிரிவில் இருவரும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்றுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பது கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.