கோரதாண்டவமாடிய கோஹ்லி..! நொறுங்கி போன மலிங்கா: மறக்கமுடியாத ஓவர்.!
கடந்த 2012ம் ஆண்டு காமன்வெல்த் பேங்க் தொடரில் அவுஸ்திரேலியாவில் நடந்த இந்தியா, இலங்கை இடையேயான வாழ்வா? சாவா? போட்டியில் கோஹ்லியின் கோரதாண்டவத்தின் மூலமே இந்திய வெற்றிப்பெற்றது.
அதுவே, கோஹ்லியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்திய அணிக்கு 40 ஓவர்களில் 340 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 36.4 ஓவர்களிலே இலக்கை எட்டி இந்தியா அசத்தல் வெற்றிப்பெற்றது. இதற்கு முக்கிய காரணம் கோஹ்லி.
விராட் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 16 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 133 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இலங்கை வீரரகளின் பந்தை மைதானத்தின் நாலாபக்கமும் பறக்க விட்டார். விராட் கோஹ்லியின் கோரதாண்டவத்தில் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்காவும் தப்பவில்லை.
போட்டியின் இறுதிகட்டத்தின் போது மலிங்கா வீசிய ஓவரில் 24 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பினார் விராட், இந்த ஓவரை யாராலும் மறக்க முடியாது.