ஜஹ்ரான் ஹாசிமிற்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என ஜனாதிபதியை சித்திரிக்கும் வெட்கமற்ற நடவடிக்கைகளில் எதிர்க் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் சதி செய்து ஜனாதிபதி ஆட்சியைக் கைப்பற்றினார் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றன என அவர் தெரிவித் துள்ளார்.
இது ஒரு துன்பகரமான சூழ்நிலை குண்டுவெடிப்புகள் கட்சி பேதமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித் துள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றுள்ளது. பலரை விசாரணை செய்து விடுதலை செய்துள்ளோம். இன்னும் பலரை விசாரணை செய்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]