கோத்தபாயவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒக்ரோபர் மாதம் பரிசீலனைக்கு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்ற நீதவான் குழாம் உறுப்பினர் எண்ணிக்கை பூர்த்தியாகாத காரணத்தினால், மனுவை பரிசீலனை செய்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகள் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.
தம்மை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படுவதனை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி கோத்தபாய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.