கோதுமை மாவில் சப்பாத்தி, தோசை, பூரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவை வைத்து இந்த விநாயகர் சதுர்த்திக்கு சூப்பரான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
தண்ணீர் – 1 கப்
வறுத்த தேங்காய் துருவல் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
சுக்கு தூள் – 1/4 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை
கோதுமை மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
தேங்காய் துருவலை நெய் விட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஆவியில் வேகவைத்து எடுத்த மாவை ஆற வைத்து அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து சூடான வெல்ல தண்ணீர்
ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
மாவை நன்கு பிசைந்ததும் கையால் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
உடலுக்கு நலம் தரும் கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை தயார்.