அதிகரித்த கோதுமை மாவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு பிரீமா நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் அந்நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 5 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்ட விலையை, அதே அளவினால் குறைப்பதற்கும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.