மக்கள் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அதனை செய்ய முடியாது போனால், எதிர்க்கட்சிக்கு செல்லவும் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagath Kumara) தெரிவித்துள்ளார்.
சிறந்த எதிர்காலத்திற்கான நிபுணர்கள் (வியத்மக) போன்ற அமைப்புகள் மூலம் அரசாங்கத்திற்கு வந்து பல்வேறு பதவிகளை பெற்றுக்கொண்ட நபர்கள் நாட்டை அழிக்க உதவி செய்து வருகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுலவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜகத் குமார இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அனுபவம் மற்றும் நாட்டின் மீதான பற்று காரணமாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நாங்கள் நம்பினோம். அவர்கள் இன்னமும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.
எனினும் ஏனைய அமைப்புகள் மூலம் , அலையில் கரைசேர்ந்து பதவிகளை பெற்ற சிலர் நாட்டை அழிக்க உதவுகின்றனரோ என் கேள்வியும் இருக்கின்றது.
கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு அனைவரும், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோருகின்றனர். இதனை செய்ய முடியாது போனால், உண்மையில் நாம் எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக வேண்டும். சில சம்பவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனா தொற்று நோய் அல்ல எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]