கோச்சடையான் படத்தால் ரஜினி மனைவிக்கு வந்த சோதனை
சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 3டி அனிமேஷனில் வெளியாகி இருந்த படம் கோச்சடையான். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்பட உரிமையை தருவதாக கூறி லதா ரஜினிகாந்த், ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் ரூ. 10 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுவரை பட உரிமையும் வரவில்லை, பணமும் வரவில்லை என்று கூறி லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் கோர்ட்டில் ஆட் ப்யூரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தனர். அங்கு வழக்கு தள்ளுபடி ஆக, சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.