கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக தெரிவுசெய்யப்பட்ட ரோஸி சேனாநாயக்க தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
மத வழிபாடுகளை தொடர்ந்து கொழும்பு மாநகர சபையில் இன்று (வியாழக்கிழமை) கடமைகளை ஆரம்பித்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஸி சேனாநாயக்க திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கொழும்பு மாநகரசபை மேயராக சத்தியபிரமாணம் செய்துக் கொண்டார்.
அவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததற்கு அமைய தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பி மக்களின் ஒத்துழைப்புடன் மாநகரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.