இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு 2017’ பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
ஏழாவது தடவையாக இடம்பெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 700 பேர் பங்குபற்றவுள்ளதுடன், சார்க் நாடுகளின் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்கு ஏற்படும் பயங்கரவாத எச்சரிக்கைகளால், வன்முறை மற்றும் அடிப்படை கோட்பாட்டுடன் வன்முறை பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோளச் செயற்பாடு எனும் தலைப்பில், இராணுவப் பயிற்சிப் பணியகத்தின் ஒத்துழைப்புடன், இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் இக்கருத்தரங்கு இடம்பெறும்.
2017ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புக் கருத்தரங்கு, உலகத்திலுள்ள பாதுகாப்பு பங்குதாரர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பாக, கொடிய பயங்கரவாத அமைப்பை தோற்கடித்ததன் பின்பு ஏற்படும் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக இந்த கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது