கொழும்பு பகுதியில் நேற்று (03) மாலை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, தற்பொழுது ஏனைய பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புக்கு வெளியிலுள்ள பகுதிகளில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி.) தரம்குறைந்த எண்ணெய்யை இறக்குமதி செய்ததனால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெற்றோலியத்துறை பிரதி அமைச்சர் அனோமா கமகே கூறுகையில்,
அடுத்துவரும் ஓரிரு தினங்களில் எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடையும். அதுவரையில் இன்னும் ஓரிரு தினங்களுக்கு இந்நிலைமை காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.