கொழும்பு, வத்தளை சென் அந்தனி தேவாலயத்தில் உள்ள இயேசு நாதர் புகைப்படத்தின் நெற்றி பகுதியில் இருந்து வியர்வை போன்ற துளிகள் வடியும் அதிசய சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனை காண்பதற்கு கத்தோலிக்கர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் போன்று வடியும் இந்த திரவம் வியர்வைக்கு சமமானதாக உள்ளதெனவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இவ்வாறு புகைப்படத்தில் இருந்து வியர்வை துளிகள் வடிந்து வருவதாக வத்தளை தேவாலய போதகர் சன்ஜீவ் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின், சாலக்குடி பகுதியில் இருந்து வந்த போதகர் குழுவினால் இலங்கைக்கு இந்த புகைப்படம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வடியும் இந்த படம் ஆரம்பத்தில் நிரோமி அமரசிங்க என்ற பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக போதகர் மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக்கு மாறான நிகழ்வு தொடர்ந்தபின் இந்த படம் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வப்போது இயேசு நாதரின் நெற்றியில் இருந்து வியர்வை துளிகள் வடிந்ததாக நிரோமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உரிய முடிக்கு தற்போது வரமுடியது. இது தொடர்பில் அறிவியல் விளக்கம் இருக்கலாம் ஆனால் யாரால் அதை நிரூபிக்க முடியும் என்று எனக்கு தெரியாதென போதகர் மேலும் தெரிவித்துள்ளார்