கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிக்கு ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பாராத சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
வைத்திசாலையின், காவலாளி ஒருவர் வைத்தியசாலை உள்ளே செல்ல விடாமல் ஐந்து நிமிடம் நுழைவாயிலில் காக்க வைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிக்கு ஒருவரை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
குறிப்பிட்ட சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதியின் வாகன பேரணி, வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க நுழைவாயிற்குள் நுழைய முயற்சி செய்த போது, அங்கிருந்த காவலாளிகள் வாகனங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
‘நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரம் தாமதித்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது” என வைத்தியசாலையின் காவலாளிகள் கூறியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், ‘ஜனாதிபதி தான் இங்கு வந்து இருக்கிறார்” என கூறியுள்ளனர்.
எனினும் காவலாளிகள் இதனை நம்பவில்லை.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் வைத்தியசாலையின் கேட்டிற்கு வெளியே நின்றமையால் ஜனாதிபதி, காரின் ஜன்னலை திறந்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் எனன பிரச்சினை என்று சைகை மூலம் கேட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ந்து போன வைத்தியசாலையின் காவலாளிகள் உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்துள்ளதோடு தங்களை மன்னித்துகொள்ளுமாறும் வேண்டியுள்ளனர்.
ஜனாதிபதி அங்கு வந்திருந்ததை அறியாத காரணத்தினால் தான் வாகன பேரணியை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.