கொழும்பு துறைமுக நகரில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன் பிரகாரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் கடற்பரப்பை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்கள் சில எட்டப்பட்டுள்ளன.
அரச தனியார் பங்குடைமையின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்துக்குள் நிரப்பப்படும் அரச காணியில் காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம், சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றின் துரிதமான அபிவிருத்திக்காக மூலோபாய முதலீட்டாளர்களை கண்டறிவதற்காக அமைச்சரவையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச தனியார் பங்குடைமைக்காக தேசிய பிரதிநிதித்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த துறைமுக நகர நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பாடசாலைக்குரிய காணிப் பகுதியில் மாநாட்டு ஹோட்டல் ஒன்றிற்காக முதலீட்டை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்ப்பாக்கின்றது.
அத்துடன் கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம், சர்வதேச வைத்தியசாலை ஆகியவற்றுக்காக முதலீட்டாளர்களிடம் ஆலோசனைகளை கோருவதற்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் குழுவொன்றையும் திட்டக் குழுவொன்றையும் நியமிப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.