இலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு வறட்சியான காலநிலையே காரணம் எனவும், பெப்ரவரி மாத இறுதி வரை இதே கடுங்குளிர் நிலவும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் இயக்குனர் எஸ்.பிரேமலால் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் பத்தாம் திகதியின் பின் நாட்டில் பெய்யவிருக்கும் மழையை அடுத்து, இந்தக் குளிரான காலநிலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிரான காலநிலை காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளதுனர்.
அத்துடன், ஒருவித மர்மக் காய்ச்சல் இலங்கையில் பல பாகங்களிலும் பலருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காய்ச்சலுக்கான காரணங்கள் பலவாறாக கூறப்பட்டுள்ள போதிலும், கடும் வறட்சியான காலநிலையும், கடுமையான குளிர்நிலையினாலுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.