கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) வருகை தந்திருந்தார்.
இதன்போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பல்வேறு புத்தகங்களை பார்வையிட்டார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகக் கண்காட்சியானது செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




