நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த வருடம் இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
திடீர் வீழ்ச்சியும், அதிகரிப்பும்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.
குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்திருந்தது.
இவ்வாறான சூழலில் இன்று (27.03.2023) காலை கொழும்பு செட்டித்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 2,700 ரூபாவால் குறைந்துள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 172000 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலையானது ஏற்றமும், இறக்கமுமாக தளம்பல்ி நிலையிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.