கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
புகையிரத போக்குவரத்து
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

பேருந்து போக்குவரத்து
எனினும், அடிக்கடி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காரணத்தினால் தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.