கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் இராணுவ கேர்னல் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் புதையல்
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட ஏழு பேர் கொண்ட குழு ஒன்று வீடு ஒன்றுக்குள் நுழைந்து 1.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் நகைகள் மற்றும் 7 சிம் அட்டைகளை எடுத்துச் சென்றிருந்தது.
வீட்டில் புதையல் தோண்டிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து வீட்டை சோதனையிடுவதாக கூறியே கொள்ளை இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளின் போது, இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்கள் கொள்ளைக்காக பயன்படுத்திய இரண்டு சிற்றுந்துகளையும் மீட்டனர்.
கொள்ளை
இந்த நிலையிலேயே இராணுவத்தில் கடமையாற்றும் கேர்னல் ஒருவரே இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர்களில் ஒருவர் முன்னாள் விமானப்படை வீரர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லவாய மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.