கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபர் சுட்டு கொலை! பொலிசார் தீவிர தேடுதலில்…
கனடாவில் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவரை அவரது வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Maple Ridge என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.2002ம் ஆண்டு Surrey நகரில் உள்ள ஒரு வாலிபரின் குடியிருப்பிற்குள் Jonathen Patko(32) என்ற நபரும் அவரது சகோதரரும் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டில் நிகழ்ந்த தகராறில் வாலிபரை ஜோனத்தென் உருட்டுக் கட்டையால் அடித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.எனினும், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் ஜொனத்தென் குற்றமற்றவர் எனக் கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் ஜொனத்தென் வீடு அருகே சரமாரியாக துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தோர் சென்ற பார்த்தபோது அங்கு ஜொனத்தென் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், ஆழமான குண்டு காயங்களால் அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
எனினும், இந்த கொலைக்கும் 2002ம் நடைபெற்ற கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேகத்திள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.