கொலைக்களமான கிரிக்கெட் மைதானம்: அடித்து கொல்லப்பட்ட இலங்கை வீரர்
இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ‘வைட்’ பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த துடுப்பாட்ட வீரர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.
உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள பொலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.